நெருக்கம் வார்த்தைகளால் அல்ல
மூச்சின் ஓசையால் அளவிடப்படுகிறது
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
மழைதுளி விழும்
நேரம் கூட
அவளின் சிரிப்பு நினைவாகும்
சின்ன சிரிப்பின் ஓசை
உள்ளத்தின் ஓசையை
மாற்றி விட்டது
மழைத்துளியில் சொரியும்
இசை போல
காதலனின் தொடுதல்
ஆன்மாவை வருடுகிறது
கணவன் பணக்காரனாக
இல்லை என்றாலும் பரவாயில்லை
கடன் காரனாக இருக்கக் கூடாது
என்று நினைக்கும் நீதானடி
உண்மையான மனைவி
இருள் கூட
வெளிச்சமாய் தெரிந்தது
அவள் கண்களில் நான்
தொலைந்த போது
ஒரு முறை
உண்மையாக காதலித்தால்
வாழ்க்கையின் இறுதி வரை
அந்த உணர்வு உயிர்வாழும்
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
காத்திருந்த
ரணமெல்லாம்
காணாமல் போனது
உன்னன்பின் கதகதப்பில்
💖 பக்கம் 359 / 478
📋 Copied