நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்
நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்
இருளில் கூட
ஒளி தந்தது காதல் அல்ல
தீண்டாமலே எரிந்த ஆசை தான்
மனதில் பதிந்த முகம்
காலம் கடந்தும்
அழியாத ஓவியம்
காத்து கிடக்கின்றது என்
கண்கள் உன்னில் துள்ளி
குதிக்கும் மீன்களை காண
உன் அழகிய இரு விழிகள்
காதலித்தால் கண்கள் பேசும்
பிரிந்தால் கண்ணீரே மொழியாகும்
விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்
நம் இதயங்களின் இசை
உலகத்தையே மயக்கும்
காதல் ராகம்
எனக்கு
பிடித்ததைவிட
உனக்கு
பிடித்தவைகளையே
மனமும் விரும்பி
ரசிக்கின்றது
சொந்தமென்று
என்னுள்
நீ வந்த பின்னே
இனி நான் தனிமையில்
தவிர்த்து இருக்க
அவசியமில்லை
செல்லும் இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவை போல்
நீயும் நினைவில்
காதலர் தின வாழ்த்துகள்