அளவுக்கு மிஞ்சினால்
அமிழ்தமும் நஞ்சாமடா
எனக்கு அமிழ்தமாகவே
தெரிகிறது உன் முத்தம்
அளவுக்கு மிஞ்சினாலும்
நீ என் உலகமல்ல
நீயே என் உயிர்
காதல் என்பது
இதயத்தில் மட்டும் அல்ல
கண்களில் பளபளக்கும்
ஒளியிலும் தெரியும்
உன் வருகைக்கு
முன்னே உனை
முந்தி கொ(ல்)ள்கிறது
உன் நினைவு
என் ஆவலை
தூண்டியே
என்றோ யோசிக்காமல்
கிறுக்கியவைகள் எல்லாம்
உன்னில் நேசம்
கொண்டுதான்
என்றுணர்கிறேன்
நீ வாசிக்கும் போது
தடவுதலில் சிதறும்
தோல் அல்ல
நிறைந்து வீசும்
எண்ணங்களே
கண்ணோட்டம்
ஒரு நொடிக்குள் நிகழ்ந்தாலும்
அதில் வாழ்நாள் காதல் வந்துவிடும்
உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
நேரமில்லை என்றாய்
ஆனால் நெஞ்சம் முழுக்க
என் நினைவாக இருக்கிறாய்
உந்தன் நெற்றி மீது
ஒற்றை முத்தமிட்டு
எனக்கானவன் நீதான் என
முத்திரை பதித்திட ஆசையடா
💖 பக்கம் 33 / 478
📋 Copied