தொட்டுவிடாத
கனவில் கூட
அந்த நெருக்கம்
உணரப்படுகிறது
கண்கள் சொன்ன ரகசியத்தை
இதயம் மட்டும் புரிந்துகொண்டது
மெளனம் பேசும் போது
இருவேற்றுமையிலும்
காதல் நுழைகிறது
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)
தூரம் காதலை நீக்க முடியாது
அது நினைவுகளால் மட்டுமே
ஆழமாகிறது
நித்தம் நீயில்லா
வேளைகளில்
சத்தமின்றி
மனதை தட்டி
எனை நினைக்க
சொல்லி தூண்டுகிறது
உன் நினைவின்
சத்தம் உனை
உதடுகள் சொல்பதைக் காட்டிலும்
மௌனமே அதிக கவர்ச்சி
காதல் ஒரு புன்னகை
ஆனால் அதில்
மறைந்திருக்கும் உணர்வுகள்
ஆயிரம் கதைகள் சொல்லும்
காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி
உன் நினைவுகள்
என் மனதில்
ஒரு பூங்காற்று போல
அவை எப்போதும்
எனக்கு மகிழ்ச்சி தரும்
💖 பக்கம் 336 / 478
📋 Copied