காதல் மொழிகளை
கேட்க வேண்டாம்
இதயம் சொல்லும்
ஓசையை கேளுங்கள்
நெருக்கம் என்பது
உடலின் அருகாமை அல்ல
ஆன்மாவின் ஒற்றுமை
முடியாத ஒன்றை
முயற்சித்து இருவரும்
தோற்று போகிறோம்
பிரிவிடம்
நீ மறந்து போன
ஞாபகங்களை
மனம் புதுப்பித்து
கொ(ல்)ள்கிறது தினம்
நினைவுகள்
சில நேரம் இதயத்தின்
துடிப்பை மாறச் செய்கின்றன
நான் இதுவரை
காத்திருந்து கிடைத்த
சிறந்த விஷயம் நீ
விண்மீன்கள் நிறைந்த
வானத்தை விட
உன் கண்கள் சிந்தும்
ஒரு துளி காதலே
எனக்கு வெளிச்சம்
மனதின்
மையல்களை
மையில் கலந்து
விழியிலொரு
கவிதை
நீ ரசிக்க...
சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
தீராத நேசம் தீராத
மோகம் என்றும் நீயே
வேறு எவருக்கும் இடமில்லை
💖 பக்கம் 337 / 478
📋 Copied