💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எண்ணிக்கையை
கணக்கிட்டால்
பல நூறுகளை
கடந்துவிடும்
ஒரு பொழுதில்
நான் உனை
நினைத்து
கொண்டிருப்பது
காதலுடன்
content_copy
நிலவை அழகாக்கும்
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு...
content_copy
நேரில் பார்க்க ஆசை
பார்க்க முடியவில்லை
கண்கள் இரண்டும்
உன்னையே தேடுகிறது
content_copy
மூச்சுகளுக்குள்ளே
கலையும் அந்த ஓசை
நெருக்கத்தின் இயற்கை இசை
content_copy
நீ மூச்சி
காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்
content_copy
நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்
content_copy
கண்களுக்கும்
சிவ ராத்திரி
உன் மௌனத்தால்
content_copy
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
content_copy
ஆசை தீண்டிய பார்வை
உடலை மட்டுமல்ல
ஆன்மாவையும் எரிக்கிறது
content_copy
வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்
💖 பக்கம் 319 / 478
arrow_back
arrow_forward
📋 Copied