முகத்தில் காணும் ஒளி
இதயத்தில் நீ விட்ட தடம்
காதல் என்பது
உரையாடல் அல்ல
இருவரும் புரிந்துகொள்ளும்
அமைதியான மெளனம்
கண்ணாடியில்
உன் முகம் பார்க்கும் போது
தெரியாத அழகு
என் கண்களில்
உன்னைப் பார்க்கும் போது
உனக்குத் தெரியும்
இதயம் தானாக சாயும் இடமே
காதலின் உண்மையான தங்குமிடம்
என்னை தொல்லையென
நினைத்து தொலைத்த
விட்டாய் ஒரு நாள்
தொலைத்து விட்டோம்
என்று வருந்துவாய்
உதடுகள் நெருங்கும் முன்பே
உடல் எல்லாவற்றையும்
புரிந்துகொள்கிறது
உன் பார்வையில்
ஒரு நாடகம் உள்ளது
அதில் நான் கதாநாயகனாக
இருப்பதை விட
உன் இதயத்தில்
ஒரு கவிதையாக இருப்பது
எனக்கு மகிழ்ச்சி
நீரின்றி
உலகுமில்லை
நீயில்லையெனில்
எனக்குலகமும் இல்லை
உயிரே
கை தொடும் அதிர்வில்
இதயம் தாளத்தை
மாற்றிக் கொள்கிறது
பேசாத நேரங்களில் கூட
நெஞ்சம் நெஞ்சம்
பேசிக்கொண்டே இருந்தது
💖 பக்கம் 316 / 478
📋 Copied