💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
வாழ்க்கை முழுதும்
தங்க வேண்டும் என்ற ஆசை
ஒரு நிமிட நிசப்தத்தில் பிறந்தது
content_copy
விரைவான மூச்சின் நடுவே
ஆசை வெடித்து கனவுகளை
தீயாக மாற்றும் சக்தியாகிறது
content_copy
திகட்டாத தேனீராய்
எப்போது நினைத்தாலும்
சுவைக்க தூண்டுகிறது
உன் தித்திப்பான
நினைவு
content_copy
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
content_copy
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
content_copy
விரல்கள் பின்னிய பின்பு
நெஞ்சங்கள் ஒன்றிணைவது
கதை தான்
content_copy
நீ விட்டு சென்ற ப்ரியம்
இந்த ஜென்மத்திற்க்கு
போதுமானதாய் இருக்கிறது
content_copy
உதடுகளின் அருகே
வார்த்தைகள் முடங்கி விடும்
காதல் மட்டும் பேசும்
content_copy
கைகளை தொடும் முன்
கண்களில் உள்ள ஏக்கம்
உணர்ந்தால் காதல் கனலாகும்
content_copy
உன் மௌனத்திற்கு
இத்தனை வலிமையா
அத்தனை உணர்வுகளையும்
தூக்கியெறிய
துணியிதே மனம்
💖 பக்கம் 314 / 478
arrow_back
arrow_forward
📋 Copied