நீ சென்று
கொண்டே இருக்கிறாய்
உன் நினைவு
வந்து கொண்டே இருக்கு
கூந்தலை பிடித்திழுத்து
விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி
ஞாபகபடுத்துது
பல வே(லை)ளைகளில்
நீயெனை மறந்திருந்தாலும்
எந்நொடியிலும்
நினைத்திருப்பது நானுனையே
நிலவொளி விழும் சாயலில்
காதல் கனவுகள்
உயிர் பெறுகின்றன
போகிற போக்கில்
அள்ளித்தெளித்தபடியே
செல்கிறது உனது சந்தம்
எனது சந்தோச தருணங்களை
உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை
செய்ய
உன் நினைவுகள்
இம்சைகளும்
இன்பமே உன்னால்
உனை சுமந்தே
காத்திருக்கு கண்களும்
மன கதவையும்
திறந்தே
நீ வருவாயென
விரல்களின் உறையாடலில்
தீப்பிழம்பாய் மூள்கும் நம் ராகம்
வார்த்தைகளில் தொலைந்துபோகும்
உணர்வுகளை உதட்டின்
சுருக்கங்கள் சொல்கின்றன
பிரிந்தாலும்
என் அன்பு
ஒரு போதும்
பொய் இல்லையே
💖 பக்கம் 301 / 478
📋 Copied