கண்கள் பேசும் மெளனமே
சில சமயம்
உணர்ச்சியின் உச்சமாகும்
இதயம் பேசும்
மொழியை காதல் மட்டுமே
புரிந்துகொள்ள முடியும்
அழுத்தம் இல்லாமல்
அவளின் சுவாசமே
மனதை கிறுக்கிய ராகம்
அளவுக்கு மேலாக
அவளை ரசிப்பதும்
இம்சைதான்
இதழ் முத்தம் இடாமல்
உன் உளறல்கள்
உணர்ந்தும் உணறாமல்
அறிந்தும் அறியாமல்
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டும் காதலில்
அழகிய அவஸ்த்தை தான்
இரவின் மௌனம் கூட
இனிமை பெறும்
இரு இதயங்கள் பேசும் போது
தூரமிருந்தாலும்
இருவரின் சுவாசங்கள்
ஒரே இசையில் ஒலிக்கும்போது
அது காதல்
பார்வை மோதும் நேரம்
உடல் முழுவதும்
மின்சாரம் ஓடுகிறது
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
உன் பெயரை பாடுகிறது
சிரிப்புக்குப் பின்னால் இருக்கிற
மென்மையான அமைதி தான்
உண்மையான காதல்
💖 பக்கம் 292 / 478
📋 Copied