வாழ்வின் வரம்
உன்னுடன்
நகரும் நிமிடங்கள்
காதலின் ஆழம்
கண்களில் தெரியும்
அதற்காக வார்த்தைகள்
தேவையில்லை
கண்ணாடி
உனை காட்டாத
போதும்
மன கண்ணாடியில்
உனை ரசிக்காத
நொடியில்லை
என்னுள்ளம்
இந்த நொடி
நீளாதா
என்று மனதை
தவிக்கவிடுகிறாய்
சுகமாய்
இதயத்தின் மௌன மொழியில்
காதல் பேசுகிறது ஆயிரம் கவிதைகள்
நீயும் நானும் நனைந்த
முதல் மழையின் ஈரம்
காயவில்லை இன்று
வரையிலும் என் மனதினுள்
கைபிடித்த மௌனத்தில்
ஆயிரம் வார்த்தைகள்
மறைந்திருக்கும்
சிரிப்பின் பின்னால்
நின்ற நம்பிக்கை தான் காதல்
என்னோடு நீயிருந்தால்
உன் கண்ணோடு
நானிருப்பேன்
காலமெல்லாம்
என் கண்ணாளா
இது நானே அமைச்சு
கிட்ட பாத நீ இல்லைனாலும்
உன் நினைவுகளோடு நான்
பயணம் பண்ணித ஆகணும்
இது என் காதல் விதி
💖 பக்கம் 290 / 478
📋 Copied