தொடுதலில் உருவாகும் அதிர்வு
ஆன்மாவின் ஆழத்தில் ஒலிக்கிறது
பிரம்மை என்றாலும்
பிரமித்து போகிறேன்
காணும் இடங்களில்
எல்லாம் உனை
காணும் போது
காற்றின் தாளத்தில்
கலந்து வரும் நெருக்கம்
கனவாக மாறுகிறது
ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும்
உணர்வதை படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உன் கண்கள் பேசும் மெளனத்தை
நான் காதலிக்கிறேன்
மனம் பதறும்
ஓர் அழுகை கூட
ஒருவரின் நினைவால்
மட்டும் வரும் என்றால்
அது காதல்தான்
காற்றோடு உளறாதே
காதோரம் இசைக்கிறது
உன் காதல் மொழி
கரையை
உரசும் அலையாய்
உரசுகிறாய்
மனதை நினைவலையில்
வார்த்தைகள் இல்லாமல்
பேசும் கண்கள் தான்
உண்மையான காதல்
அன்பை கொட்டவும் அக்கறை
காட்டிடவும் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் மனம் ஏங்குவது
என்னவோ விரும்பி சிறைபட்ட
அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே
நீ எங்கு போனாலும்
என் மனம் அங்கே
உனுடன் இருக்கின்றது
💖 பக்கம் 289 / 478
📋 Copied