மௌனமான இரவில்
பார்வை மட்டும் பேசும்
அதுதான் காதலின் ஆழம்
நீ அருகில் இருந்தால்
என் இதயம் எழுதும்
கவிதைக்கு முடிவு இல்லை
காதல் பரிமாறும் அமைதி
சோர்வான மனதிற்கு
ஓர் இனிய தாலாட்டு
இன்பமான வலியே
உன் தேடலில்
தொலைதலும்
மௌனம் காதல் பேசும்
மொழி என்றால்
சுவாசம் அதன் இசை
இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
எனை விட்டு
நகர மறுக்கும்
உன் நினைவின்
உண்மையான பாசம்
எதிர்பார்ப்பின்றி கொடுக்கும்
கரம் போல இருக்கிறது
உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே
பற்றி கொண்டாய்
கரத்தை
பத்தி கொண்டது
காதல் தீ
பார்வைகளின் உரசலில்
நீ இல்லாமல்
நான் இல்லை
என்பது கூட
பொய்யாக இருக்கலாம்
ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்
💖 பக்கம் 288 / 478
📋 Copied