நட்சத்திரங்களை
எண்ணத் தேவையில்லை
ஒரு பார்வை போதும்
இரவெல்லாம் கனவாக மாற
மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!
இதயம் தேர்ந்தெடுத்த
நிமிடம் தான்
வாழ்க்கை திசை திரும்பும் தருணம்
இசைத்தட்டு சுழல்வது
போல சூழலும் இவள்
விழி சூழலில் மையம்
கொண்ட காதல் புயல் நீ
மனதுக்குள் பிறந்த வலி கூட
காதலின் முத்தம் போலத் தெரியும்
நீயற்ற இரவுகளும்
சற்று தாமதமாகவே
விடிகிறது உன்
வருகைக்காக காத்திருந்து
மௌனம் பேசும் போது
அவளது விழி
என் ஆசையைக் கிளப்புகிறது
ஒருவர் அருகில் இருப்பது
உலகமே பாதுகாப்பாக
இருப்பது போல உணர்த்தும்
நான்
மறைந்தாலும்
உன் மனதில்
மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை
வாழ்ந்திட வேண்டும்
பாசத்தின் ஒரு பார்வை
ஆயிரம் வார்த்தைகளை விட
ஆழமான அர்த்தம் தருகிறது
💖 பக்கம் 282 / 478
📋 Copied