வண்ணங்களில்
வாழ்க்கையில்லை
என்றாலும்
உன் எண்ண அழகில்
வண்ணமானது
நம் வாழ்க்கை
மெல்ல சாயும் தோளில்
மனம் முழுவதும்
சுமையை அகற்றுகிறது
மௌனமாக இருந்தாலும்
புன்னகை காதலைச் சொல்கிறது
நாணாலின்
தீண்டலிலும்
உன் ஞாபகங்கள்
பேரிம்சையாய்
தீண்டுதே மனதை
திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடி
வரை ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்
நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்
கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்
மௌனம் காதல் பேசும்
மொழி என்றால்
சுவாசம் அதன் இசை
நீ எத்தொலைவுக்கு
சென்றாலும் என்
நினைவின்றி நீயில்லை
என்பதே நம்
காதலின் வெற்றி தான்
தீண்டலின் துளி
உடலில் தீ மூட்டும் கவிதையாகிறது
💖 பக்கம் 28 / 478
📋 Copied