இப்போது தான்
நீ சென்றாலும்
எப்போதோ
உனை பார்த்தது
போல்
கண்களும் பா(கா)த்து
கிடக்கு காதலுடன்
என் கள்வா
மணப்பெண்கள்
தாலி கழுத்தில்
ஏறும் நொடி
கண்ணீர் சிந்துவது
இறந்து கொண்டிருக்கும் தன்
காதலை நினைத்துக்கூட இருக்கலாம்
நினைப்பதற்கு நினைவுகள்
பல இருந்த போதும்
உன் நினைவை விட
இனிமையான
நினைவுகள் எதுவுமில்லை
ஒரு முறை
உண்மையாக காதலித்தால்
அந்த உணர்வு வாழ்நாளில்
எப்போதும் அடங்காது
தொட்டுச் சென்ற கைகளும்
தொலைவிலே விட்டுவிட்ட
நினைவுகளும்
காதல் அதைத்தான் சொல்கிறது
உன் கண்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் சொல்ல நினைத்த
வார்த்தைகளை
மறந்து போகிறேன்
உன் மௌனம்
என் மொழியை
திருடிக்கொள்கிறது
கண்ணால் பேசியே
கற்று கொடுத்தாய்
என் கண்களுக்கும்
காதலிக்க
மௌனமாக பேசும் கண்கள்
காதலின் முதல் கவிதை
காதல் கண்களால்
தொடும் முத்தம்
இதயத்தில் எப்போதும் அழியாது
பார்வையில் ஒளியோடு
மனதிலும் உயிர் மூச்சோடு
பசுமை சேர்க்கும் உணர்வு காதல்
💖 பக்கம் 272 / 478
📋 Copied