இந்த உலகில் ஒவ்வொருத்தரும்
எதோ ஒன்றிற்கு அடிமையாகி
இருக்கிறார்கள் நானும்
அடிமை தான் உன் அன்பிற்கு

பாசத்தில் பேசப்படாத
சில வார்த்தைகள்
நெஞ்சை நனைய வைக்கும்

மௌனத்தில் கூட
காதல் உதிரும் போது தான்
உண்மை நெருக்கம் தெரிகிறது

மூடிய விழிகளும்
திகைக்கவைக்கும் நினைவுகள்
அதுவே ஆழ்ந்த காதல்

விரல்களின் தொடுதலில்
குமுறும் மனது தான்
உண்மையான ஆழமான காதல்

தொடர்வதில் தவறு இல்லை
உணர்வில் மட்டுமே
பரிபூரண காதல் பிறக்கிறது

தேடி வந்து
தேட வைத்து
இன்று நினைவுகளில்
வாழ வைத்து
விட்டாய் என்னை

உன் பிரிவின் வெப்பத்தில்
ஆவியாகி விட்டது
கண்ணீர் குளம்
ஆகாயத்தை அண்ணாந்து
பார்த்து காத்திருக்கிறது
மீண்டும் உன் பிரிய
மழையில் நனைய

அனலான
உன் நெருக்கத்தில்
தணலாகுது மனம்
அணைத்துவிடு
கொஞ்சம் குளிரட்டும்
இரவும் குளிர் நிலவாய்

காதலின் ஆழம்
கண்களில் தெரியும்
அதற்காக வார்த்தைகள்
தேவையில்லை