காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி
இருவர் இடையிலான
நிமிடம் ஒன்று
காலத்தையே மறக்க வைக்கும்
உலகில் உள்ள அனைத்து
பூக்களின் வாசங்களும்
சற்று குறைவு தான்
உன் கூந்தல் சூடி பின்
வாடிப்போன அந்தப்
பூக்களின் வாசத்தின் முன்
வார்த்தைகள் தேவைப்படாத
தருணத்தில் கூட
பாசம் இரு உயிர்களை
இணைக்கும் பாலமாக உருவாகிறது
மவுனமே
வாழ்க்கையான போதும்
அவளின் கொலுசு சத்தம்
இன்பமென என்னை
வாழச்செய்கிறது
காதல் என்பது
கண்கள் பார்க்கும் அழகு அல்ல
இரு உள்ளங்கள் இணையும் இசை
என் நாழிகையில்
தவிர்க்க முடியாத
நொடிகள் நீ
வார்த்தை இல்லாமல்
பேசும் கண்கள்
உண்மையான காதலை சொல்கின்றன
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை
விழிகள் மௌனமாக
பேசும் போது
இதயம்தான் பதிலளிக்கிறது
💖 பக்கம் 261 / 478
📋 Copied