மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்
மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்
எங்கிருந்தோ
நினைவை
அள்ளி தூவி
நனைக்கின்றாய்
மனதை
மார்கழி குளிராய்
தேடவில்லை
உனை தொலைவது
நானென்பதால் உன்னில்
உன் நினைவுகள்
என் இதயத்தில்
பூக்கும் ரோஜாக்கள்
வெறும் அமைதியில் கூட
இருவரின் மௌனம்
காதலாய் பேசுகிறது
நான் பேசும் வார்த்தைகள்
உன் காதில் விழ வேண்டும்
ஆனால் என் மௌனம் மட்டும்
உன் இதயத்தை தொட வேண்டும்
இருளில் கூட
ஒளி தரக்கூடியது
கண்களின் பேச்சு
வாசனை கூட
நினைவாக மாறும் போது
ஆசை வெறும் எண்ணம் அல்ல
விரல்களின் எளிதான தொடுதலே
சில நேரங்களில்
இதயத்தின் முழு கதையை
எழுதி விடும்
வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு