உன் இதழ்
இட்ட முத்தங்கள்
எல்லாம்
முத்துக்களாகி அலங்கரித்தது
முகத்தையும் அழகிய
பருக்களாய்
தூக்கத்தில் கனவாய் வருவதும்
விழித்தவுடனே நினைவாய்
நிலைத்திருப்பதும்
உண்மையான நெருக்கம்
உன் பார்வை
பேசாத வார்த்தைகளை
என் இதயம் புரிந்துகொள்கிறது
உண்மையான காதல்
காலத்தையும் தூரத்தையும் மீறி
உயிரைப் பற்றிக் கொள்கிறது
இரு நெஞ்சம்
இணைந்து பேசிட
உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
நடுக்கத்திலும்
கனிந்த ஆசையும் இணைந்தால்
காதல் தீயாக மாறும்
என் அமைதிக்குள்
ஆழ்ந்திருப்பது நீயே
கண்கள் பேசும் நொடியில்
இரு உயிர்கள் வார்த்தையின்றி
காதலின் ஆழத்தில்
கரைந்து ஒன்றாகின்றன
மொத்த எதிர்பார்ப்பும்
நீயென்ற ஒன்றே
உன் வழி
நோக்கும்
இந்த விழிகளுக்கும்
நீ காதோடு
கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்
எல்லாம் மனதை
ரகசியமாய் அலங்கரிக்குது
தனித்திருக்கும் தருணங்களில்
💖 பக்கம் 259 / 478
📋 Copied