வெட்கம் கலந்து வரும் ஆசை
இதயத்தை தீயாய் கொளுத்தும்
உன் பார்வையில் நான்
என் உலகை காண்கிறேன்
உன் சந்தோஷத்தில்
என் வாழ்க்கை வாழ்கின்றேன்
சுவாசத்தின் வேகம்
ஆசையின் அடையாளம்
விடியற்பொழுதில்
வெளிச்சம் பரவுவதைப்போல்
உன் வருகைப்பொழுதெல்லாம்
காதல் பரவி அழகாகிறது
என் உலகம்
மொட்டில்லா
மெட்டியிலும் மெல்லிசை
உன் கரம்
பட்டதால்
இரண்டு இதயங்கள் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
மௌனத்தின் கரையில்
பார்வை மட்டும் போதும்
இதயம் ஏக்கத்தின் இசையை
கேட்டு உருகும்
காற்றாய் வீசுகிறாய்
காதோடு பேசுகிறாய்
விழியலே
மொழி பகிர்ந்து
தென்றலாய் வருடியே
சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது
உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்டாலும்
காட்டி கொடுக்கிறது
நாணம் நானும்
உன் நினைவில்
மூழ்கி கொண்டிருப்பதை
💖 பக்கம் 254 / 478
📋 Copied