கடவுளிடம்
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர...
என் தனிமையின்
அமைதியில்
பேரிரைச்சலாய்
உன் மௌனம்
சத்தமின்றி மனதில்
யுத்தம் செய்கிறது
அவளின் மௌனம்
பேசும்போது மொழிகள்
தோல்வியடைகின்றன
சில நேரங்களில்
கண்கள் இணையும் நேரம்
உலகத்தின் நிம்மதியை வென்றுவிடும்
காலமும்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
தூரத்தில்
உன்னை வைத்து
என் மனதோடு
உறங்கும் அவளின்
விழிகளுக்குள்
உறங்காது உயிர்த்திருக்கும்
எனது நினைவுகள்
மூச்சுகள் கலந்து
ஒரே சுவாசமாக மாறும்போது
தூரம் என்பது
நம் காதலில் இருக்காது
உன் மடியில் தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற
கனவு களைந்து போகட்டும்
கண்கள் பேசிய இடம்
காதலின் பிறப்பிடமாக மாறிவிட்டது
உன் இதயத்துக்குள்
ஒரு வீடு கட்டிக்கொண்டு
வாழ்வது என் கனவு
💖 பக்கம் 253 / 478
📋 Copied