தொட்டும் இல்லாத
ஒரு அணைப்பு
நெஞ்சில் ஆழமாக பதியும்

தூரம் இடைவெளியாக இல்ல
நினைவுகள் என்னும்
பாலமாக இருக்கின்றன

எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்...

மனதோடு இணைந்த
கைகளை பிரிப்பது கடினம்

நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்

மௌனமாக தொடங்கிய இரவு
நிச்சயம் வரலாறு எழுதும்

தோளில் சாய்ந்த ஒரு நிமிடம்
வாழ்க்கையின் எல்லா கவலைகளையும்
அழிக்கக் கூடிய ஓர் மருந்து

எட்டா தூரத்தில்
நீயென்றாலும்
உனை எட்டி
விடுகிறேன்
கற்பனையில்
உன்னருகில்

உன் தொல்லைகளும்
இன்பம் தான்
நீயில்லா பொழுதுகளில்
எனை சீண்டும்
போது

ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு