💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்
content_copy
அனைத்தும் நீயென்றவன்
அள்ளித்தந்து சென்றான்
அழகிய நினைவுகளை
நொடி நொடியாய்
ரசித்திருக்க
content_copy
பாசம் வார்த்தைகளால்
சொல்ல முடியாத மென்மை
content_copy
கண்கள் பேசும்
காதல் மொழி
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது
content_copy
மனதுக்குள் நினைத்தால்
என் முன் வந்து
விடுகிறாயே
நீயும் எனக்குள்
தான் எப்போதும்
இருக்கின்றாயா
content_copy
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
content_copy
என் பேனா முனை
வரைவதெல்லாம் ஓவியம்
என நினைத்திருந்தேன்
அவை யாவும்
கீறல்களாகவே மாறியது
என் வாழ்வில்
content_copy
கலைந்த கனவுகளை
மீட்டுக்கொடு மீண்டுமொரு
கனவு காண
திரானியில்லை
கண்களுக்கு
content_copy
காற்றலையில்
கலந்து வந்த
உன் குரல்
இதயத்தை
நனைக்க
மனமும் பூத்தது
பூஞ்சோலையாய்
content_copy
வெறும் தோற்றத்தில்
இல்லை ஈர்ப்பு
அதற்கு உணர்வுகள்
ஓர் அடிப்படை
💖 பக்கம் 249 / 478
arrow_back
arrow_forward
📋 Copied