இரு கைகளின் தொடுதலில்
ஆயிரம் கனவுகள் பிறக்கின்றன
உன் அன்பு
எனது இதயத்தின்
வேதியியலை மாற்றும் மந்திரம்
தொட்டதுமே ஓடும்
மின்னழுத்தம் போல்
தோலில் கவிதை எழுதுகிறது
வென்று விடு
இல்லையேல்
எனை
கொன்று விடு
காதல் களத்தில்
ஒவ்வொரு நாளும்
உன்னை இழப்பது
என் இதயத்தை
கனமாக்குகிறது
சிலர் வருவது
கடவுளின் ஆசீர்வாதம்
போல இருக்கும்
கண்கள் சந்திக்கும் தருணமே
வாழ்க்கையின் அழகான வர்ணம்
மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென
நெஞ்சின் துடிப்பை
வேகப்படுத்தும் ஒரு தீப்பொறி
உன் தொடுதலில் மறைந்திருக்கும்
தூரத்தில் இருந்தபோதும்
நெருக்கத்தை உருவாக்கக்கூடியது
உண்மையான காதல்
💖 பக்கம் 248 / 478
📋 Copied