மௌனத்தின் நடுவே
காதல் ஒரு இசையாக
ஒலிக்கிறது
அருகில் இல்லாமலும்
உயிர் முழுவதும் வாழ்கிறவர்களே
காதலின் உண்மை முகம்
சண்டையில் கூட
காதலைப்
பார்க்க முடியும்
ஆயிரம் கவிஞர்கள்
வர்ணித்தும்
தீராத கவிதை நீ
வாசிக்கத் தெரியாமல்
உன்னில் தொலைந்து
போகிறேன் நான்
பார்வை படும்
தூரமெல்லாம்
பயணிக்க ஆசை
நீ உடனிருந்தால்
அழகானவை
எல்லாம்
உன் அன்பின்
அடையாளங்கள்
ஆயுள் கைதியாய் ஆனது
இணைந்த இதயங்கள்
விடுதலை பெற
விருப்பமேயின்றி
உனை
பின் தொடரவோ
நான்
நடைபழகியது
எல்லோரும் status பார்க்கிறார்கள்
என் மனநிலையை
படிப்பது நீ மட்டும்
தொலைவாக நீ இருந்தும்
தொடுகிறாய் நொடிக்கொரு
முறை நினைவெனும்
கரங்கள் கொண்டு
💖 பக்கம் 247 / 478
📋 Copied