முத்தத்தில் வெப்பம்
இல்லை என்றால்
அது ஆசையின்
மொழியைப் புரிந்துகொள்ளாது
தொலைவேன் என்று தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி மொத்தமாய்
தொலைவேன் என்று நினைக்கவில்லை
உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
மோதுவது
விழிகள் தான்
ஆனால்
உடைவதோ இதயமே
உன் நினைவுகள்
ஒரு மெழுகுவித்தி போல
மனசில் மெதுவாக
எரிந்து கொண்டே இருக்கிறது
இதயத்தில் உருவான இசை
அவளின் சிரிப்பால் தான் பிறந்தது
எப்போதோ
நினைக்கவில்லை
எப்போதும்
நினைத்திருப்பது
உனையே
பார்வைகள் பேசும் போது
காதல் ஏற்கனவே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஆயிரம் இரவுகள்
காத்துக் களைத்து
போனது என் இதழ்கள்
உன் இதழ் முத்தம்
இல்லாமல்
விரல்கள் பிணைந்த தருணத்தில்
ஆன்மாவும் ஒன்றாகி விடுகிறது
💖 பக்கம் 244 / 478
📋 Copied