💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விழிகளில் பூக்கும் காதலும்
வார்த்தைகளில் மிதக்கும் நேசமும்
உன் அருகினில் என் உலகம்
உணர்ச்சிகளின் வானவில்
தீண்டலே நம் காதல்
content_copy
என்னுலகம் பெரிதென்றாலும்
என்னுள்ளம்
வட்டமிட நினைப்பது
உன் மன வானில்
மட்டுமே
content_copy
மழைநீர் போல
சிதறும் நினைவுகள்
அவற்றில் பாசமே மின்னல்
content_copy
உன்னில் பாதியான
பின்னே என்னுள்
நான் முழுமையானேன்
content_copy
அன்பே என்றாலே
அது நீயென்றாகி
போனது
என் பேரன்பே
content_copy
மனதை புரிந்தும்
வலியை தருகிறாயே
என்ற வருத்தமிருந்தாலும்
உன்னை கோபிக்கவோ
வெறுக்கவோ
எப்போதும் துணிந்ததில்லை
இந்த மனம்
அத்தனை காதல் உன்மீது
content_copy
மௌனத்தில் கூட
காதலின் ஓசைகள் கேட்கும்
அதற்கு இரண்டு இதயங்கள்
மட்டும் போதும்
content_copy
இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே
content_copy
காதலின் தோல்வியை விட
கொடுமையான நரகம்
வேறேதுமில்லை
content_copy
உன் புன்னகை கண்டு
கண் விழிக்கையில்
அன்றைய தினம்
சுகமாய் பிறக்கிறது
💖 பக்கம் 243 / 478
arrow_back
arrow_forward
📋 Copied