ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்...

சில மௌனங்கள் ரொமான்ஸாக மாறும்
சில தொடுதல்கள் கவிதையாய் மாறும்

ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும்
உணர்வதை படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உன் கண்கள் பேசும் மெளனத்தை
நான் காதலிக்கிறேன்

விண்ணில்
விளையாடும்
நிலவைப்போல்
என்னுள் விளையாடுகிறது
உன் நினைவு...

தொட்டுவிட்டு சென்ற
விரல்கள் கூட
நினைவில் நின்று வலி தரும்

இதயம் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னைக் காத்திருக்கும்
பாடலாகி விடுகிறது

விலகினாலும் உள்ளத்தில்
இடம் மாற்றமில்லை
அன்பு நிலைத்திருக்கிறது

உன்னைக் காணாத
ஒரு நாளே எனக்குத் தவிப்பு
உன்னை பார்க்கும் தருணமே
என் உயிரின் அர்த்தம்

யோசித்து எழுதவில்லை
நேசித்து எழுதுகிறேன்
உனை சு(வா)சித்து
கொண்டிருப்பதால்
என்னுள்

இரு கண்கள்
சந்தித்த இடத்தில்
இரு உயிர்களும்
ஒன்றாகிய பிறகு
எதுவும் பழையது இல்லை