இருவரும் பேசாமல்
பார்வைகள் மட்டும் சேரும்
நேரம்தான் காதலின் உச்சம்
எண்ண ஏட்டின்
ஆசைகளை
கன்ன ஏட்டில்
பதித்தேன்
இதழ் கவிதைகளாக
தாய்மடி தேடும்
குழந்தையாய்
மனம் நாடுது
உனை துன்பத்திலும்
நகரா நொடிகளும்
நகர்கிறது
உன்னருகில் வேகமாய்
நீ சென்ற பின்னே
நானும் பயணிக்கின்றேன்
உன் நினைவுகளோடு
மன பாதையில்
பிரிந்தால் பறந்திடும்
உயிரென்றே
பற்றிக் கொள்கிறேன்
உனை மனதுக்குள்
என்னவா
மூச்சின் இடைவெளிகளில் கூட
காதலின் அலை
மெதுவாக பரவி
இதயத்தை நனையச் செய்கிறது
கண்ணில் தெரியும்
அழகை விட
மனதில் உணரும் காதல் பெரிது
முத்தம் விழும் இடம் உதடானாலும்
உணர்வு விழும் இடம் இதயம்தான்
உன் சிறுத்துளி
நினைவு போதுமென்
அகம் முகம் மகிழ...!
💖 பக்கம் 23 / 478
📋 Copied