💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் மடியில்
தலை சாய்க்கும்
அந்த ஒரு நொடி
இந்த உலகத்தின்
அத்தனை சத்தங்களும்
அடங்கிப் போகின்றன
content_copy
மனது மொழியற்றதாயினும்
காதல் அதில் கவிதை எழுதும்
content_copy
மௌனத்தில் பேசும் பார்வைதான்
சில நேரங்களில்
முழு காதலை சொல்கிறது
content_copy
என் சந்தோஷத்தை விட
உன் சந்தோஷம் தான்
முக்கியம் எனக்கு
content_copy
எங்கிருந்தோ
நினைவை
அள்ளி தூவி
நனைக்கின்றாய்
மனதை
மார்கழி குளிராய்
content_copy
வெப்பமான சுவாசத்தில்
ஒரு முழு இரவின் காதல்
அடங்கியிருக்கிறது
content_copy
இமைக்கா விழிகள்
உனக்காய் காத்திருக்கு
பல கவிதை பேச
content_copy
உன் மீதுள்ள
அதீத காதல்
எனையும் எல்லைகள்
மீற சொல்லுதே
உனையும் இம்சித்து
content_copy
நீயில்லை என்றால்
என் இதயம்
இசையற்ற வீணை
content_copy
நீ என்னை தொடவில்லை
ஆனால் உன் வார்த்தைகள்
என் உள்ளத்தைக் கட்டிப்போட்டுவிட்டன
💖 பக்கம் 224 / 478
arrow_back
arrow_forward
📋 Copied