எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று
தானாக ஓடும் என் கால்கள்
எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று
தானாக ஓடும் என் கால்கள்
சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர
வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்
உன் கழுத்தை
கட்டிக்கொண்டு
ஆளும் டை மீதும்
கொஞ்சம்
பொறாமையே
என்னிடத்தை
பிடித்து விட்டதே
என்று
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
வெளிச்சமாக பேசாமல்
இருளிலும் மனதை உருக்கும்
காதல் ஒரு கரிசனம்
மௌனத்தில் ஒளிந்திருக்கும் ராகசியம்
காதலின் நெருக்கம் போலவே சூடானது
இரவில் நிலா
தேவை இல்லை
நினைவுகள் ஒளிக்கின்றன
வார்த்தைகள் இல்லாமல்
பேசும் கண்கள் தான்
உண்மையான காதல்
இதயம் பறிக்காமல்
மனதை முற்றிலும்
கொள்ளையடிப்பதே
ஆழமான காதல்