பார்வை தொடங்கும்
இடத்திலேயே
ஆசை அழுத்தமாக துளிர்க்கிறது
நெருக்கத்தின் வெளிச்சத்தில்
துடிக்கும் இரு இதயங்கள்
ஒரு காதலின் இசை
மௌனத்தில் கலந்த
ஓர் உதட்டுச்சிரிப்பு
ஒரு காதலின் முழு கவிதை
உன் மீதான காதல்
என்பது நீ இருக்கும்
வரையல்ல நான்
இறக்கும் வரை
நெருக்கம் தேவை இல்லை
ஒரே மூச்சில் துடிப்பதை
உணர்ந்தால் போதும்
நீ உடன்
பயணிக்கும்
நொடிகளை போல்
வேறெதுவும்
எனை மகிழ்விக்காது
என்னவனே
சாட்சிகள் ஏனடா
மன சாட்சியே
நீயான பின்
நீரில் மூழ்கியும்
அணையவில்லை
உன் நினைவு தீ
நிழலாக பின் தொடரும்
நினைவுகள் தான்
ஆழமான காதலின்
மௌனக் குரல்கள்
நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்
காதல் மழையில் நனையும்
சிறு குழந்தையாகி
விடுகிறேன் நான்
💖 பக்கம் 209 / 478
📋 Copied