விருப்பத்தின் அலை
நினைவுகளைக் கடந்தும் பாய்ந்து
கனவுகளுக்குள்
தீப்பொறிகளாக பரவுகிறது
நீ கடல் கடந்து போனாலும்
கடல் தாண்டியும் வருவேனடி
உன்னைக் கவர்ந்து செல்ல
வெறும் வரிகளும்
உன் வார்த்தைகளாகவே
எதிரொலிக்கிறது
காதலோடு கவிதையாய்
கண்களின் மொழி
இதயத்தைக் காட்டிலும்
ஆழமாக பேசுகிறது
புன்னகையிலிருந்து தொடங்கிய பயணம்
இதயத்தின் அடுக்கு அடுக்காய்
ஆழமாகி விடுகிறது
வருடும் மயிலிறகில்
உன் கரத்தின் மென்மை
கிறங்குகிறேன்
காதலில் மெல்ல
மனம் பிணைந்த இடத்தில்
தூரம் கூட தோல்வியடைந்தது
காலங்கள் கடந்தாலும்
உனக்காக
என் மனக்கதவு
திறந்தே இருக்கும்
நீயும் எனக்காக
காத்திருக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்
உன் ஆரவாரம்
இல்லையெனில்
என் உள்ளமும்
அசைவற்ற அகிலமே
இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ
💖 பக்கம் 208 / 478
📋 Copied