நம்மை
நனைத்த மழைதுளி
உலர்ந்தபோதும்
நாம் இணைந்த
நினைவுதுளி
இன்னும் ஈரமாகவே
மனதில்...!
எண்ணத்தின்
ஓசை நீயாக
கண்களுக்குள்
வண்ண கனவாய்
நாமே
நம் மௌனத்தில் கூட
காதல் பேசுகிறது
அதை உணர்ந்தால் போதும்
உன்னை புரிந்துக்கொண்ட
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்...
உன் பாசம் நிறைந்த
நெருக்கத்தில் என் இதயம்
புதிய வாழ்வை தொடங்குகிறது
கண்கள் கலக்கும் தருணம்
உலகம் இருவருக்குள் மட்டுமே இருக்கும்
கூட்டத்தில்
இருந்தாலும்
கூண்டு கிளியாய்
அடைபட்டு
விடுகிறேன் உன்னுள்
ஒரே அருகில் நின்றாலும்
இரு இதயங்கள்
இடைவெளி இன்றி
துடிக்கும் போது
ரொமான்ஸ் பிறக்கிறது
சில பேர் சந்திப்பே
வாழ்க்கையின் பாடலாக மாறும்
ஆசைகளை துறக்க
நினைத்தால்
மொத்த ஆசைகளின்
உருவமாய்
நீ சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் மனதில்
💖 பக்கம் 203 / 478
📋 Copied