தடவுதலின் மென்மை
காற்றிலும் மின்னல்
பார்வையிலும் இருந்தது
தடவுதலின் மென்மை
காற்றிலும் மின்னல்
பார்வையிலும் இருந்தது
ஊடலின் போதெல்லாம்
சிறு ஆறுதல்
நம் சண்டைகளுக்கு
ஆயுளில்லை என்ற
உன் வார்த்தையே
உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
தொட்ட பின்
விரல்களில் தான்
ராகம் உணர்ந்தது
மௌனம் பேசும் போது
மூச்சு கூட
காதல் செய்யத் தொடங்கும்
காட்சி பிழையென்றாலும்
ரசிக்க தவறவில்லை
விழிகள்
கடந்து போவது
உன் சாயல்
பிம்பம் என்பதால்
காண துடிப்பது
விழி உனையென்றால்
காலமெல்லாம் காத்திருப்பேன்
நினைவுகளில்
உனை தொடரவிட்டு
நெருங்குகிறாய்
என் உள்ளத்தில்
காதலாய் நீ
கல் வெட்டாய்
பதிந்து போனாய்
மனதில்
ஒரே கண்ணோட்டத்தில்
வாழ்க்கையின் முழு கனவுகளும்
முடிவடைகின்றன