மனதிற்கு பிடித்தவரை
பார்த்து பேச
காத்திருப்பதே அவர்
மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்
மௌனம் பிடிக்கும்
உன் வார்தைகளின்
வசீகரத்தில் தொலைந்து
எனை மறந்து
கேட்டு கொண்டிருக்க
நீ என்னருகில் இல்லை
என்பது எவ்வளவு
உண்மையோ அவ்வளவு
உண்மை நீ எனக்குள்
இருக்கின்றாய் என்பது
தொலைவாய்
என தோன்றவில்லை...!!
தேடுதலில்
என் எண்ணமில்லை...!!
விலகியும்
நீடிக்கிறாய் என்னருகில்...!!
(பிரியாத - வரமாக)
உன் நினைவுகளுக்கு
உருவம் கொடுத்தால்
உலகின் அழகிய
சிலை நீதான்
கண்கள் பேசாமல் இருந்தாலும்
பார்வையில் காதல்
முழுக்க எழுதப்பட்டிருக்கும்
அணைப்பின் சூடு
இரவின் இருளையும்
உருகச் செய்கிறது
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்
விழிகளால் தொடும் போதே
உடல் முழுக்க ஓர் அதிர்வலை
💖 பக்கம் 1 / 478
📋 Copied