உன்னை நினைத்தால்
துயரங்கள் முற்றிலும்
மறைகின்றன
உன் நினைவுகள்
எனது இதயத்தை
மகிழ்ச்சியுடன் நிரப்புகின்றன
பிடித்தவர்களுடன் நாம்
சண்டை போடுவது
அவர்களை பிரிவதற்காக
இல்லை பிரிந்துவிட
கூடாது என்பதற்காக
நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்
உன்னோடு பேசாத
நொடி கூட
என் இதயம் ஓயாத
ஓசை போல இருக்கிறது
காதல் என்பது
கண்களில் தொடங்கி
இதயத்தில் வாழ்ந்து
ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒளி
அவள் சிரிப்பில்
ஒளிந்திருக்கும் அமைதி
ஒரு உலகத்தை மறக்கும்
வலிமை உடையது
இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!
காதல் என்றும் சுகமானது
கனவுகளும் நினைவுகளும்
புது விதமானது
இனிய காதலர் தின வாழ்த்துகள்
உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்
உன் மூச்சு
என் கழுத்தை வருடும் போது
என் இதயத்தின் துடிப்பே
வேகமாகிறது
💖 பக்கம் 196 / 478
📋 Copied