கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி
கிடப்பதும்
சுகம் தான்

தூங்க முடியாத இரவுகள்
காதலின் இசையாக
மாறுகின்றன

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
காதல் கவிதையாக
எனது இதயத்தில் பதியிறது

உன் தித்திக்கும்
காதல் பார்வையில்
காப்பியாய் இனிக்கிறது
கசாயமும்

அளவில்லாத
உன் அன்பு வேண்டும்
என் ஆயுள் முழுவதும்

மார்கழி குளிராய்
மனம்
உன் ஆடை
போர்வையாக

வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை

வேண்டும் போது
கிடைக்காத காதலும்
வேண்டாத போது
கிடைக்கும் காதலும்
உயிரற்றது

நட்சத்திரங்களை
எண்ணத் தேவையில்லை
ஒரு பார்வை போதும்
இரவெல்லாம் கனவாக மாற

இருவரும் பேசாமல்
விழித்த அந்த இரவு
காதலின் கவிதை ஆனது