மெய் அன்பில்
பேரரசனும் சிறுபிள்ளையாவான்
காதலெனும் உயிரோவியத்தின் முன்
கனமான பொழுதுகளும்
கண நொடியில்
கரைகிறது
உடன் நீயிருக்க
ஒரு பார்வை
பூமியை மறக்கும் அளவுக்கு
மனதை அழகுபடுத்தும்
நினைவு ஒரு சிறைச்சாலை
மனம் தன்னாகவே
அதில் அடைந்து விடுகிறது
உன் அதீத
அன்பில்
ஆழ்ந்து
வாழ்தலும் வரம்
என் அன்பனே
உன் தொடுதல்
என் உள்ளத்தின்
எல்லா சோகங்களையும்
கரைக்கிறது
கனமில்லா மலர்
கூடையாய் மனம்
எத்தனை சுமைகள்
இருப்பினும்
உடன் நீயிருப்பதால்
எப்போதும்
என் ராட்சஷனாகவே
இருந்து விடு
எனை காதலித்தே
கொல்லும்
வானவில்லாய் நீ
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை
ஒரு பார்வை சிரிக்க வைக்கும்
அந்த நேரம் முதல் காதல்
கணக்கில் சேரும்
💖 பக்கம் 185 / 478
📋 Copied