💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்
content_copy
நீ சென்ற
பின்னும்
ஓடி திரிகிறது
அங்குமிங்கும்
குறும்பு
குழந்தையாய்
மன அறைக்குள்
உன் நினைவுகள்
சுகமான இம்சயாய்
content_copy
எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது
content_copy
பார்வையின் மென்மை
வார்த்தையற்ற கவிதையை
இதயத்தில் எழுதுகிறது
content_copy
அன்பின் மொழி
உரைக்கும் போது
நான் உன்னுடைய
காதலின் சங்கீதம்
ஆகி விடுகிறேன்
content_copy
மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்
content_copy
நிலா பார்க்கும் போது கூட
அவளின் முகம் நினைவாகிறது
content_copy
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
content_copy
கொலுசொலியும்
இம்சைதான்
உன் நினைவிசையை
தூண்டிவிடும் போது
content_copy
தொட்ட பார்வையின் நிசப்தம்
ஆசைகளை விழுங்க வைத்தது
💖 பக்கம் 162 / 478
arrow_back
arrow_forward
📋 Copied