எங்கும் நீ
எதிலும் நீ
என்று
ஏதோவொன்று
ஞாபகப்படுத்த
தவறியதில்லை
உன்னை
காதல்
சொன்னாலும் புரியாது
வரைந்தாலும் தெரியாது
அது ஓர் உணர்வு
உணர்ந்தால் மட்டுமே புரியும்
காதலர் தின வாழ்த்துக்கள்
தொல்லைகள்
இல்லா தொலைவில்
நம் உலகமும்
பேரழகு
காதல் ஒரு மொழி இல்லை
அது ஓர் அதிர்வெண்
இரு இதயங்களுக்கிடையிலான
அமைதியான உரையாடல்
உன் அருகாமை
என் இதயத்தின்
இனிய சங்கீதம்
கலைத்திட விரும்பாத
கனவொன்று கண்களில்
நிறைந்திருக்கு நீயாக
உன் ஒரு "எப்படி இருக்க?"
என்ற message
நாள் முழுக்க இருந்த
சோர்வை கரைத்து விடுகிறது
மூச்சு அருகில் கலக்கும் போது
நேரம் தன் ஓட்டத்தை மறக்கிறது
உன்னை நினைக்கையில்
சிந்துகின்ற கண்ணீர்
கனமானது ஏனெனில்
அதில் கரைவது நான்
புகையாய் சூழ்ந்து
தீயாய் எரிக்கிறது
உன் நினைவு தணல்
💖 பக்கம் 14 / 478
📋 Copied