மனம் இல்லை
என் வசம் நான்
உன் வசமானதிலிருந்து
மனம் இல்லை
என் வசம் நான்
உன் வசமானதிலிருந்து
உனதன்பின்
போர்வைக்குள்
அடங்கி கிடப்பதும்
ஆனந்தமே
யார் என்னை
தாழ்த்தி பேசினாலும்
நீயெனை எப்போதும்
உயர்ந்த இடத்திலேயே
வைத்திருக்கிறாய்
அன்பே உன்னிதயத்தில்
நேரமில்லை என்றாலும்
ஆசைக்கு எல்லை இல்லை
என்ற உண்மை
அவளிடம் தெரிந்தது
இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை
உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே
எத் தொலைவில்
நீயிருந்தாலும்
கண்ணருகே தான்
உன் பிம்பம்
என் நிழலாய்
தனிமையையும்
விரட்டி விடுகின்றாய்
நீ நினைவாய்
மன நிறைவாய்
வந்து என்னில்
உன்னை நினைத்தால்
துயரங்கள் முற்றிலும்
மறைகின்றன
உன் நினைவுகள்
எனது இதயத்தை
மகிழ்ச்சியுடன் நிரப்புகின்றன
சில பார்வைகள்
வாழ்நாளையே மாற்றிவிடும்