நீ நடக்கும்போது
பூக்கள் மலர்கிறதே
அது என் இதயத்தின் உவமை
மார்கழி குளிர்
என்னயும்
கோலம் போட
வைத்தது
என்னவன்(வள்) கன்னத்தில்
(மார்கழிக்கவிதை 😁)
என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில்
தாயை காண
காத்திருக்கும்
குழந்தையாய்
உன் வழி
நோக்கி
என் விழிகளும்
காத்திருக்கு
வந்த பிறகு
"சரி ஆகும்"
என்ற நம்பிக்கை
எனக்கு பழக்கமாகி விட்டது
பிரிந்தால் பறந்திடும்
உயிரென்றே
பற்றிக் கொள்கிறேன்
உனை மனதுக்குள்
என்னவா
இரு கண்களில் கலந்த கனவுகள்
வாழ்க்கையை அழகாக்கும்
வண்ணம் தருகிறது
மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்
பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது
செய்தி வாசித்து
நாட்கள் ஆயிற்று
உன்னில் வசிக்க
தொடங்கிய பிறகு
உன்னை தவிர வேறு
உலகம் கிடையாது எனக்கு
💖 பக்கம் 133 / 478
📋 Copied