உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென

நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ

உன்னோடு தொடங்கிய என்
வாழ்க்கை உன் கைகோர்த்து
உன்னோடே முடிய விரும்புகிறேன்

மனதிற்கு பிடித்தவர்களையும்
அதிக பாசம் வைப்பவர்களையும்
தொலைவில் வைத்தே
அழகு பார்க்கிறது விதி

நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே

மௌனம் பேசும் இரவுகள்
ஆசையின் மொழியாகும்

எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்
உன்னிடமே மயங்குகிறேன்
மாயம் செய்ததென்னவோ

மௌனமான கண்களால்
சொல்லப்படும் காதல்
ஆயிரம் வார்த்தைகளை விட
ஆழமாக இருக்கும்

முழு உலகமே விலகினாலும்
ஒரு இதயத்தின்
துணை போதும்
வாழ ஆசைப்பட

அழகான நினைவுகள்
காதலை நிரந்தரமாக்கும்
ஆனால் அவற்றை மறக்க
முடியாததும் உண்மை