உன் தீண்டலின் மோகத்தில்
காதல் அலைகள்
கரைபுரளும் என் நெஞ்சில்
புறக்கணிக்கிறேன்
நீ வராத
பொழுதுகளை
கடவுளிடம்
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர...
நீயிருக்கும் இடம்
வெப்பமான நிலம்
அங்கே என் உயிர்
ஒவ்வொரு முறை புதிதாக பூக்கும்
அவளது சிரிப்பில்
ஒரு உலகத்தை காணலாம்
அதில் வாழ்ந்து விடும்
ஆசைதான் காதல்
அம்பாய் துளைக்கும்
உன் அன்பிற்காகவே
எத்தனை முறை
என்றாலும்
இறந்து பிறக்கலாம்
என் அன்பே
தோற்று மட்டும் போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்
என்ன வரம் பெற்றதோ
அந்நீர்த் துளிகள் உன் மீது
பட்டு உன் தேகத்தில்
முத்த ஊர்வலம் நடத்த
காதலில் தோற்றவர்கள்
தோற்றதற்காக அழவில்லை
இன்னும் அந்த நினைவுகள்
தொடர்கிறதே என்பதற்காக
தான் அழுகிறார்கள்
மென்மையான தொடுகை
என் உள்ளத்திலேயே
ஒரு தீயாக எரிகிறது
💖 பக்கம் 131 / 478
📋 Copied