இது நானே அமைச்சு
கிட்ட பாத நீ இல்லைனாலும்
உன் நினைவுகளோடு நான்
பயணம் பண்ணித ஆகணும்
இது என் காதல் விதி

அத்தனை
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது

இருவரும் பேசாமல்
பார்வைகள் மட்டும் சேரும்
நேரம்தான் காதலின் உச்சம்

மூச்சை தொட்ட உணர்வுகள்
காமத்தின் முத்தமாக நெஞ்சில் விழும்

மௌனமும் ருசி பெறும்
காதல் விழிகளில் கரைந்தால்

இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ

தூரமாயினும் உள்ளம்
உருகி எல்லா
நாளும் உன்னை
நினைக்க தோன்றும்
அன்பு போதும்

நெஞ்சுக்குள் வாழ
ஆரம்பித்த பிறகு
பிரிவுக்கு இடமில்லை
நினைவுகளுக்கு வழியில்லை

மறைத்துக்கொள்
நெஞ்சத்தை
எனக்கு சொந்தமான
இதயத்தை
தீண்ட காற்றுக்கும்
அனுமதியில்லை

நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது
என் பெயர் இத்தனை அழகு என்பதே