தொட்டதே இல்லை
ஆனால் மனதை
மூழ்கவைத்தாள்
நூறு மொழிகளில்
கவிதை எழுதினாலும்
உன் மௌனத்திற்கு ஈடாக
ஒரு சொல்லையும் என்னால்
கோர்க்க முடியவில்லை
நீ என்னை தொடும்போது
என் மனதோடு
என் ஆன்மாவும்
துள்ளித் திரிந்துவிடுகிறது
எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே
கனவு கலைந்த
பின்னும்
கண் மூடி ரசிக்கும்
நினைவாய்
நீ இம்சிக்கிறாய்
மனதில் கலையாமல்
கண்களில் பிறக்கும் கனவு
இதயத்தில் நனையும் காதல்
காதல் சிரிக்க வைப்பது
போல் சிரிக்க வைக்கும்
ஆனால் நிச்சயம் ஒரு
நாள் அழ வைக்கும்
வென்று விடு
இல்லையேல்
எனை
கொன்று விடு
காதல் களத்தில்
நான் எங்கே இருந்தாலும்
என் இதயத்தின் திசை
உன்னைச் சுட்டிக்காட்டும்
பார்வையில் மறைந்து கிடக்கும்
மௌனம் தான்
காதலின் உண்மை குரல்
💖 பக்கம் 127 / 478
📋 Copied