துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்
இன்பமான வலியே
உன் தேடலில்
தொலைதலும்
இன்னும் நீண்டாலென்ன என்று
தோன்றாமல் இருப்பதில்லை
நம் பிரியமானவர்களோடு
இருக்கிற நொடிகளில்
பலமுறை கடந்து போனாலும்
அவள் மட்டும்
ஏனோ பக்கத்தில் இருப்பது
போன்ற உணர்வு
மனதை வருடிப்போகிறது
தூரத்தை என்னால்
தாங்க முடியும் ஆனால்
நீ இல்லாத வாழ்க்கையை
என்னால் கற்பனை
செய்து பார்க்க முடியாது
இதழ்கள் பேசாத வார்த்தைகளை
பார்வைகள் சொல்வதுதான்
உண்மையான காதல்
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்
கண்கள் சொல்லாத
வார்த்தைகளை துடிப்பே
மொழிபெயர்க்கும் போது
காதல் பிறக்கிறது
மடியில் தலை வைத்து
உறங்கும் கனவுகள்
இன்று அவளின் மார்பில்
உயிர்பிழைக்கும் யதார்த்தம்
ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்
💖 பக்கம் 120 / 478
📋 Copied