பார்வையின் மென்மை
வார்த்தையற்ற கவிதையை
இதயத்தில் எழுதுகிறது
விரல்கள் தேடிக் காணும் இடங்கள்
விருப்பங்களின் பரிசோதனை
உன் புன்னகை
என் உலகத்தைக் கவர்ந்தது
உன் மௌனம்
என் இதயத்தை
உன்னிடம் கட்டுப்படுத்தியது
கோடையும்
மார்கழியே
உன்னருகில்
இதயத்தில் இடம் கொடுத்தவனை
மறக்க முயன்றாலும்
நினைவு கதவை மூட விடாது
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
இதயம் சுமக்கும்
நினைவுகளைச் சொல்ல
வார்த்தைகள் போதாது
மௌனம் கூட காதலாகி விடும்
பெயர் தெரியாமல்
மனதை கொள்ளை
கொண்டவர்தான்
காதலின் கலைஞன்
உனக்காக நான் இருக்கிறேன்
கவலைப்படாதே
என்பதை விட
பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை
ஆழ் கடலில்
அமைதியான இரைச்சலாய்
ஆர்ப்பரிக்கிறாய்
ஆழ் மனதில்
பேரிரைச்சலாய் அகிம்சையால்
💖 பக்கம் 119 / 478
📋 Copied